நியாயத்தீர்ப்பு நாள்
அசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு. மும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன். அது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் இறைவனுக்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது. எப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சோதி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த வெளிச்சத்தில் அவனால் சரியாக பார்க்க இயலவில்லை. இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது. இறை : அசிம், நான்தான் இறை...